மகாராஷ்டிராவில்..
நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி மற்றும், 4 வயது குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த கணவரின் செயல் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் பகுதியில் ஏக்நாத் ஜெயபாயே என்பவர் வசித்து வருகிறார். இராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு பாக்யஸ்ரீ என்ற மனைவியும், 4 வய்தில் குழந்தையும் உள்ளனர்.
தற்போது ராஜஸ்தானில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி மீண்டும் 2-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தனது தாயார் வீட்டுக்கு செல்லாமல் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளது. மேலும் ஏக்நாத், தனது மனைவி பாக்கியாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.
அதோடு தாயார் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வரும்படி வரதட்சணை கொடுமை செய்து தாக்கியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஏக்நாத், தனது மனைவியை தாக்கியுள்ளார். அதோடு நிறைமாத கர்ப்பிணி என்றும் எண்ணாமல், அவரை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் தனது 4 வயது மகளையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
கொலை செய்த பின்னர், ஏக்நாத், தானே சென்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து உயிரிழந்த மனைவி, மகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.