2 குழந்தைகளை கொலை செய்து தாய் விபரீத முடிவு… கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

743

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டலுபேட்டை தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தனஞ்ஜெயா. இவரது மனைவி மேகா . இவர்களுக்கு 3 மற்றும் 6 வயதில் 2 பெண்குழந்தைகள். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மேகாவின் தந்தை மகேஷ், தனஞ்ஜெயா குடும்பத்துக்கு நகை-பணம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது. சில ஆண்டுகள் பிரச்சனையில்லாமல் சென்ற வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு தகராறு வரத்தொடங்கியது.

மேகாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தனஞ்ஜெயா அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் தனஞ்ஜெயாவின் தாய் நிர்மலம்மா, தந்தை மல்லிகார்ஜுனாவும் கூட தொடர்ந்து திட்டி தீர்த்தனர். இதனால் மேகா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 14ம் தேதி மனதை கல்லாக்கி கொண்டு 2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேகா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வரதட்சணை கொடுமையால் மேகா தனது மகள்களை கொன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் மேகாவின் தந்தை வரதட்சணை கேட்டு தராததால் மகளையும், பேத்திகளையும் அவரது மருமகன் தனஞ்ஜெயா மற்றும் அவரது குடும்பத்தினர் கொன்று தூக்கில் உடலை தொங்கவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மேகாவின் கணவர் தனஞ்ஜெயா, மாமியார் நிர்மலம்மா, மாமனார் மல்லிகார்ஜுனா 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.