சொந்த ஊருக்கு அழைத்து செல்லாத கணவன்.. விபரீத முடிவு எடுத்த மனைவி!!

661

கிருஷ்ணகிரியில்..

தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தன் கணவர் சொன்னது ஊருக்கு அழைத்து செல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதன் சாவ்.

இவர் தனது மனைவி பூனம் தேவி மற்றும் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டையில் தங்கி கூலி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, பூனம் தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் பூனம் தேவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பூனம் தனது சொந்த ஊரான ஜார்கண்டிற்கு செல்ல வேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் 10 நாட்கள் கழித்து செல்லலாம் என மாதன் கூறியுள்ளார். இதன் காரணமாகவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பூனம் தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் தன்னை சொந்த ஊருக்கு அழைத்து செல்லாததால் மனமுடைந்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.