அளுத்கம, பேருவளை சம்பவங்களுக்கு அமெரிக்க தூதரகம் கண்டனம்!!

570

US

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் நேற்று முதல் பரவிய வன்முறைகளை அமெரிக்க தூதரகம் கண்டிக்கிறது.

சட்ட ஒழுங்கை பேணி மக்களின் உயிர்களையும், வழிபாட்டு ஸ்தலங்களையும், சொத்துக்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அவசரமாக கேட்டுக் கொள்கிறோம்.

தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி அதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். வன்முறைகளை தவிர்த்து, பொறுமை காத்து, சட்ட ஆட்சியை மதித்து நடக்குமாறும் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்.