விஜய் ஆண்டனி வாழ்வில் தொடர் மன அழுத்தம்.. தொடரும் தற்கொலை சோகம்!!

1334

சினிமாவில்..

சினிமாவில் இருப்பவர்கள் எல்லோரும் வசதியானவர்கள், கவலையில்லாதவர்கள் அவர்களுக்கென்ன கஷ்டம் இருக்கப்போகிறது என்று பல எண்ணங்கள் பொது மக்களிடம் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.

ஆனால் அவர்களும் நம்மைப்போன்ற வலி நிறைந்த வாழ்க்கையோடு வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படித் தான் விஜய் அன்டனி வாழ்க்கையிலும் பல இழப்புகள் இருக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். சின்னத்திரையில் ஆரம்பித்து சுக்கிரன் திரைப்படம் மூலம் வளர ஆரம்பித்தார்.

அவர் ஒரு இசையமைப்பாளராகவதற்கு முன்பு தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், எடிட்டர், ஆடியோ பொறியாளர், இயக்குனர் என்று பல வேலைகள் செய்திருக்கிறார். விஜய் அன்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி, சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.

இந்த தம்பதிகளுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். நடிப்பில் பிஸியாக இருந்த விஜய் அன்டனி தற்போது அவரது நடிப்பில் “ரத்தம்” திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

இன்று அதிகாலை விஜய் அன்டனியின் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணிக்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர் மன அழுத்தம் காரணமாக தன் துப்பாட்டாவைக் கொண்டு மின்விசிறியில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், உயிரிழந்த மீரா கடுமையான அழுத்தத்தை அனுபவித்து வந்ததாகவும் அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. விஜய் அன்டனியின் மகள் உயிரிழந்த தகவல் அறிந்து திரைப்பிரபலங்கள் அனைவரும் நேரில் செற்று அஞ்சலியும் ஆறுதலும் தெரவித்து வருகிறார்கள்.

விஜய் அன்டனியின் வாழ்க்கையில் பல சோகங்கள் பல கஷ்டங்கள் என்பன நிரம்பியிருக்கிறது. இன்று விஜய் அன்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டது போல தான் சிறு பிள்ளையாக இருக்கும் போது தன் தந்தையும் இப்படியொரு தவறான முடிவை எடுத்துக் கொண்டது பற்றி முன்னதாக நிகழ்ச்சியொன்றில் கூறியிருக்கிறார்.

அதில், வாழ்க்கையில் ஒருவருக்கு எவ்வளவு கஷ்டமோ, துன்பமோ வரலாம் ஆனால் அதற்காக தற்கொலை மட்டும் செய்துக் கொள்ளக் கூடாது. அதிலும் தான் வாங்காத ஒரு கடனுக்காக யாரும் தற்கொலை செய்துக் கொள்ளக் கூடாது.

பொறுப்பில்லாமல் யாரைப் பற்றி யோசிக்காமல் என் தந்தை தற்கொலை செய்துக் கொண்டார். தந்தை இறக்கும் போது எனக்கு 7வயது. தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் தற்கொலை செய்துக் கொண்டார்.

தந்தை இறந்த பிறகு என்னுடைய அம்மா எங்கள் இருவரையும் வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டார். அந்த வலியை நான் அதிகம் அனுபவித்திருக்கிறேன்.

நான் அமைதியா இருக்கேன், அதிகம் பேசமாட்டேன், அழுத்தமா இருக்கேன், சில விஷயங்கள் கவனிக்கிறேன் என்றால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். வாழ்க்கை எவ்வளவு வலி நிறைந்தது என்று எனக்கு தெரியும் என அதில் பேசியிருக்கிறார்.