மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக : சர்ச்சைகளுக்கு முடிவு!!

1309

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணையின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்புக்களில் எதிர்ப்புகள் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.