தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்ற நிலையில் உணர்வெழுச்சியுடன் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் ஊர்திப் பவனியானது அம்பாறை பொத்துவிலில் ஆரம்பித்து 6 ஆவது நாளான இன்று வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வெளிநாட்டு பிரஜைகள், வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் ஊர்தியை வரவேற்று மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் வவுனியாவின் நெடுங்கேணி, புளியங்குளம், ஓமந்தை, வவுனியா நகரம், குருமன்காடு, தாண்டிக்குளம், பம்மைமடு, வைரவபுளியங்குளம், திருநாவற்குளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் குறித்த ஊர்தி சென்ற நிலையில் அங்கும் பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்திற்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.