ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம்…பெற்றோர் பரபரப்பு புகார்!!

1196

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் 9-ம் வகுப்பில் படித்து வந்த மாணவன் அதிஃப் சித்திக். இன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த சித்திக் திடீரென மயங்கி விழுந்தார்.



இதைக் கவனித்த நதீம் கான் என்ற ஆசிரியர், அவரைக் கொண்டு சென்று சிபிஆர் கொடுத்தார். இதையடுத்து மாணவனை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தங்கள் மகன் மரணத்தில் மரணம் இருப்பதாக அதிஃப் சித்திக் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது இயற்கையாக நடைபெற்ற மரணம் அல்ல என்று கூறிய அவர்கள், பிற்பகலில் சித்திக் உடல்நிலை சரியில்லை என்று முதலில் பள்ளியில் இருந்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கு வந்த போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினர்.

மருத்துவமனை சென்ற போது சித்திக்கின் உயரிழந்த உடலைத் தான் காட்டினார்கள் என்று கண்ணீர் விட்டு கதறினர். சிறுவனின் குடும்பத்தினரிடமிருந்து காவல் துறை அதிகாரப்பூர்வமாக புகாரைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுவனின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.