கனடாவில் கைதான இலங்கை தமிழர் : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

1993


கனடாவில்..கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான பிரம்ரனில், சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரம்ரனிலுள்ள பெவ்வேர்ட் ட்ரைவ் அன்ட் மௌண்ரனாஸ் வீதியில் (Bovaird Drive and Mountainash) வைத்து பொலிஸ் அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்து 13 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதாக சந்தேகநபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை அணுகிய சந்தேகநபரான அனுஷன் ஜெயக்குமார், தன்னை அதிகாரியாக அடையாளப்படுத்தி பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியுள்ளார்.சந்தேகநபரின் நிழற்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


பொலிஸ் அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்தமை, வலுக்கட்டாயமாக சிறைபிடித்தமை, பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் பாலியல் குறுக்கீடு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.