இறுதிப் பந்துவரை போராடி போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்த இலங்கை அணி!!

467

SL

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 575 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது . பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 415 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 453 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

இதைத் தொடர்ந்து 122 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

கடைசி நாள் ஆட்டத்தில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தடுமாற்றத்தில் தவிக்க ஆரம்பித்தது. 390 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பயணம் செய்த இலங்கை அணி ஆட்ட நேரம் முடிவில் 90 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் இந்த போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தோல்வியில் இருந்து இலங்கை அணி தப்பியது.