தம்பியை சுட்டுக் கொன்ற அன்பு அண்ணன்!!

618

Bro

பிரான்ஸ் நாட்டில் உடன் பிறந்த சகோதரனை சுட்டுக் கொன்றதாக நபர் ஒருவரை பொலிசார் விசாரித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெயிட் அல் இலி (54) என்பவர், தனது சகோதரரான சாத் அல் இலியை (50) சுட்டுக் கொன்றதாக சந்தேகப்பட்டு பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னசி நகரில் காரில் வைத்து சாத் மற்றும் அவரது மாமியார் சுடப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சாத்தின் மகள்கள் ஜெயினப் (7) மற்றும் ஜீனா (4) உயிர்பிழைத்தனர்.

இந்நிலையில் சாத்தின் சகோதரரான ஜெயிட் மீது சந்தேகப்பட்டு பொலிசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், ஜெயிட் இந்த வழக்கில் சரியாக பதில் கூற மறுப்பதாகவும், இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சகோதரர்களுக்கு இடையே முன்பகை இருந்தது குறிப்பிடதக்கது.