மோடி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!!

443

Modi

காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆறு ஆளுனர்களை பிரதமர் மோடி, பதவி விலக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவி ஏற்ற பிறகு நிர்வாகப் பணிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மாநில ஆளுனர்களை நீக்கிவிட்டு, புதிய கவர்னர்களை நியமனம் செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முரளி மனோகர் ஜோஷி உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு ஆளுனர் பதவி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மத்திய அரசில் உருவாகியுள்ளது. எனவே, தற்போது 6 மாநில ஆளுனர்கள் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநில ஆளுனர் எம்.கே.நாராயணன், கேரள மாநில ஆளுனர் ஷீலா தீட்சித், ராஜஸ்தான் மாநில ஆளுனர் மார்க்கரெட் ஆல்வா, குஜராத் மாநில ஆளுனர் கமலா பெனிவால், மராட்டிய மாநில ஆளுனர் சங்கர நாராயணன், திரிபுரா மாநில ஆளுனர் தேவேந்திர கொன்வார் ஆகிய 6 மாநில ஆளுனர்கள் அனைவரும் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள்.

எனவே இந்த 6 மாநில ஆளுனர்கள் விரைவில் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரசைச் சேர்ந்த ஆளுனர்கள் நீக்கப்படுவது பழி வாங்கும் செயல் என்று சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், இதை பா.ஜ.க. தலைவர்கள் மறுத்துள்ளனர்.