கிளிநொச்சியில் வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயம்!!

516

Vaal

கிளிநொச்சி மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

விநாயகபுரம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தினை அடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மூவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேச வாசி ஒருவர் தெரிவித்தார்.

இவ் வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.