அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் விவேக் ராமசாமி!!

468

அமெரிக்காவில்..

சட்ட விரோதமாக குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் இரத்து செய்வேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் அமைய பெற்ற ரொனால்ட் ரீகன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த விவாதத்தில் அகதிகள் குடியுரிமை தொடர்பில் விவேக் ராமசாமி கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு தீவிரமாக போட்டியிடுகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளதால் அவர் பதவிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளார்.

சட்ட விரோதமாக இந்நாட்டில் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) எனப்படும் பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் ரத்து செய்து விடுவேன்.

அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது திருத்தம் குறித்து எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். ஆனால், நான் அந்த திருத்தத்தை படித்திருக்கிறேன். அதன்படி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி, அதன் பின்பு இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை தடை செய்வது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.