வவுனியாவில் RISE அமைப்பால் உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

871

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ‘பசுமையை நேசிப்போம்’ என்ற தொனிப்பொருளில் RISE அமைப்பால் வவுனியா சின்னத்தம்பனை அ.த.க. பாடசாலையில் மரம் நடுகை செயற்றிட்டம் RISE அமைப்பின் தலைவர் திரு.லக்ஸ்மிகாந்த் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வு நேற்று (16.06) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. ‘பசுமையை நேசிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வும் மே ற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த பாடசாலையின் அதிபர், திரு. ஜதீஸ்கரன், மரம் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாக எடுத்துரைத்தார். இச் செயற்றிட்டத்தை எமது பாடசாலயில் மேற்கொண்டமைக்கு நன்றிகளை தெரிவித்ததோடு அமைப்பின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கும் தொடர்ந்து அவர்களின் செயற்றிட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய RISE அமைப்பின் தலைவர், உலக சுற்றாடல் தினம் தொடர்பாகவும் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் சுற்று புற சூழலில் ஏ ற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார். எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறன செயற்றிடங்களை எமது அமைப்பு முன்னெடுத்ததாகவும்,சிறு வயதிலேயே மாணவர்கள் மரம் வளர்க்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நோக்கி வளர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் அமைப்பின் உறுபினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திரு. ஜதீஸ்கரன், ஆசிரியர்களான திருமதி.ஜேசுதாசன், திருமதி.நடராஜா பாடசாலை மாணவர்கள், RISE அமைப்பின் தலைவர் திரு.லக்ஸ்மிகாந்த், பொருளாளர் திரு.மோகனகாந்த், உறுப்பினர்களான திரு.அனந்தசயன் மற்றும் திரு.கேசவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

DSC02513 DSC02531 DSC02534 DSC02538 DSC02547 DSC02561 DSC02565