ஹைதராபாத்தில்..
இன்றைய இளம் பிள்ளைகளுக்கு கேட்பதற்கு முன்பே பெற்றோர்கள் அனைத்தையும் வாங்கி குவித்து விடுகின்றனர். எதற்கும் நோ சொல்வதே கிடையாது. இதனால் என்ன கேட்டாலும் கிடைத்து விடும் என்ற மனோபாவத்தில் வளர்கின்றனர்.
வளர்ந்த பிறகு இது முடியாது, இதை செய் என சொன்னால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவுகளுக்கு போய் விடுகின்றனர். ஹைதராபாத்தின் நல்லகண்டலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி அஹானா.
இவருக்கு 12 வயது. இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட பள்ளி தேர்வுகளில் கணக்கு பாடத்தில் போதிய மதிப்பெண்கள் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலேயே கணித பாடத்துக்கு டியூசன் சேர்த்து விட்டனர்.
அஹானா தினமும் மாலை 1 மணி நேரம் கணக்கு டியூஷன் செல்ல ஆரம்பித்தார். இதனால் தனது வழக்கமான விளையாட்டு நேரம் பறிபோவதாக அந்த சிறுமி கூறிக்கொண்டே இருந்தார். பெற்றோர் கேட்காமல் அவளை வற்புறுத்தி டியூஷன் அனுப்பி உள்ளனர்.
வழக்கம் போல் பள்ளியில் இருந்து 4 மணிக்கு வீடு திரும்பிய அஹானா கணக்கு டியூஷன் போகப் பிடிக்கவில்லை; பிரண்ட்ஸ் உடன் சேர்ந்து விளையாடப் போகவேண்டும்’ என்று பெற்றோரிடம் அடம் பிடித்தார். கோபமடைந்த பெற்றோர், டியூஷன் போயே ஆக வேண்டும் என கண்டித்தனர்.
இதனால் அஹானா மனமுடைந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதே கட்டிடத்தில் அமைந்திருக்கும் டியூஷன் டீச்சர் வீட்டுக்கு போகாமல் பால்கனிக்கு சென்றார்.
பலரும் நடமாடிக் கொண்டிருந்த நேரத்தில் பால்கனி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தார். அவர்கள் வசிக்கும் 15வது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதனால் அஹானா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் தனக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என தாயாருக்கு மொபைலில் தகவல் அனுப்பிவிட்டு, அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தின் பாதிப்பில் 6ம் வகுப்பு சிறுமியும் மன அழுத்தத்தில் தவறான முடிவை தேடியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.