வவுனியா இந்துக் கல்லூரி அதிபர் திருமதி.ஜீ.நடராஜா அவர்கள் கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உயர்வு பெற்றமைக்கான பாராட்டு விழா நேற்று (16.06) பாடசாலை சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விழாவில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர். இவ் விழாவில் அதிபர் திருமதி.ஜீ.நடராஜா அவர்களை பாராட்டி கவிதை ஒன்றும் சமர்பிக்கப்பட்டது..
இந்துக்கல்லூரியின் சரஸ்வதியே
இயம்பிட முடியாதம்மா உம் புகழ்
வான் புகழ் கொண்ட உம் சேவையை
வாழ்த்திட ஆயிரம் நா போதாதம்மா
பெற்றவா.. மகிழ்ந்திட உற்றவா.. போற்றிட
பெரும் சேவை தன்னை ஈய்ந்தாயம்மா
ஆசிரியராய் அதிபராய் அரும் பணியாற்றி
அன்பாக சமூகத்தில் விளங்குகின்றாய் அம்மா..
சிறப்பாக சேவை தன்னை புரிந்ததாயே
சிறக்கட்டும் உம் பணி மேலும் இம்மண்ணில்
உடல் பொருள் ஆவியை உரமாக்கி
உயர்த்திய இந்துக்கல்லூரி இப்போது
சகல துறைகளிலும் சாதனை பல படைத்து
சாகா வரமாய் உம் புகழ் பாடும்
பள்ளிப் பாலரையூம் பாடசாலை ஆசிரியரையும்
பண்புடனே நோக்கி பாலாக்கி அவர்களை
தலை நிமிர்ந்து தன் மானத்தோடு வாழ
தங்கத் தகடாக மாற்றி எமை எல்லாம்
நின் பணிக்கு எல்லை இல்லை என்பதை
நீள்கின்ற உம் பதவி எமக்கூட்டும்..
அளவிலா சோதியாய் உம் சேவை
அகிலத்தில் பரவட்டும் என்றென்றும்
புகழ் பூத்த தேவியாய் புன்னகை மாறாமல்
பூவுலகு உள்ளவரை தொடரட்டும் உம் பணி
வாழ்க வளமோடு வருடம் நூறு தாண்டியென
வாழ்த்தி நிற்கிறது தாம் வளர்த்த இந்துக்கல்லூரி
ஆசிரியார் நலன்புரிச் சங்கம்,
வவுனியா இந்துக்கல்லூரி.







