பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு சிறுமிகள் மாயம்!!

1413

தெபலவில்..

நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் பிபில பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பில் சிறுமிகள் இல்லத்தின் உதவி கண்காணிப்பாளர் பிபில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சிறுமிகள் தெபல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர் இல்ல உதவி காப்பாளருக்கு அதிபர் அறிவித்ததையடுத்து அவர்கள் திரும்பவில்லை என தெரிய வந்துள்ளது.

பதினாறு வயதுடைய இரு சிறுமிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.சிறுமிகளைத் தேடுவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிபில பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.