ரகசியத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நபர்கள் மீது வழக்கு!!

554

Fb

பிரான்ஸ் நாட்டில் கும்பல் ஒன்று வேகத்தை பதிவு செய்யும் கமரா இருக்கும் இடத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் அவ்வேரான் பகுதியை சேர்ந்த 10 லொரி ஓட்டுநர்கள் வேகத்தை பதிவு செய்யும் கமராக்கள் மற்றும் பொலிஸ் சோதனை சாவடி எங்குள்ளது என்பது குறித்த தகவல்களை மற்ற வாகன ஓட்டிகளுக்கு பேஸ்புக்கில் எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரான்ஸ் பொலிசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செயதுள்ளனர். வழக்கு பதிவு செய்யபட்ட ஓட்டுநர்களின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு 1500 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், தான் தனது நண்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் பொலிசார் தன்னை ரேடர் கருவி போல் செயல்பட்டதாக கூறி கைது செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் வேகத்தை பதிவு செய்யும் கமராக்கள் இருக்கும் இடத்தை குறிக்கும் ரேடார் கருவிகள் மற்றும் GPS கருவிகளை தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.