குஷ்பு போனது நஷ்டமே, ஆனாலும் விசாரணை உண்டு : டி.கே.எஸ் இளங்கோவன்!!

682

kushboo

திமுகவில் இருந்து குஷ்பு விலகியது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு தாங்க முடியாத மன அழுத்தத்தினால் திமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், என்ன பிரச்சனைக்காக கட்சியில் இருந்து விலகினார் என்பதை குஷ்பு தெரிவித்திருக்க வேண்டும்.

பிரச்சனை குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும். இருப்பினும் கட்சியின் மீது அதிருப்தியோடு இருப்பதாக குஷ்பு தெரிவித்திருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

மேலும் எந்த ஒரு கட்சியும் உறுப்பினர்களை இழப்பதை விரும்பாது. நிச்சயமாக கட்சிக்கு இது நஷ்டம் தான் என்றும் மக்களின் ஆதரவு எங்களுக்கு தேவை, அரசியல் கட்சிகள் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.