கருணாநிதி என் தந்தை மாதிரி : ட்விட்டரில் உருகிய குஷ்பு!!

602

Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி என் தந்தை மாதிரி என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து விலகும் முடிவை அவர் அறிவித்த பிறகு, அவருக்கு ட்விட்டரிலும், தொலைபேசியிலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் தரும் விதமாக ட்விட்டரில் அடுத்தடுத்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில் இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எனக்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி. நான் வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை. எனவே உங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட வேண்டாம். என் குடும்பத்துடன் சில காலம் நிம்மதியாக இருக்க விரும்புகிறேன்.

அடுத்த ட்வீட்டில், கலைஞர் மீது நான் எப்போதுமே பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் ஒரு தலைவர் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் வாய்க்காத தந்தை மாதிரி. அதை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.