செங்கல்பட்டில்..
கடந்த மாதம் 9 -ம் திகதி, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்து உள்ள சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. இதில், மணப்பெண் ஆர்த்தி கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர்களுடைய திருமணமானது, 3,500 பேருக்கு பிரியாணி விருந்து, 80 சவரன் நகை என ஆடம்பரமாக நடைபெற்றது. திருமணமாகி 22 நாள்கள் புதுமண தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 3 -ம் திகதி சேலையூர் அருகே உள்ள தான் படித்து வரும் தனியார் பள்ளிக்கு செல்வதாக ஆர்த்தி கூறியுள்ளார். ஆனால், கல்லூரி போன ஆர்த்தி வீடு திரும்பவில்லை. அவருடைய மொபைல் போனும் ஸ்விட்ச் ஆஃப் -ல் உள்ளது.
இதன் பின்னர், வீட்டில் பார்த்த போது தான் 80 சவரன் நகையும் காணவில்லை என்பது தெரிந்துள்ளது. இதனால், ஆர்த்தியின் கணவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது தான், ஆர்த்திக்கு திருமணத்திற்கு முன்பு சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவருடன் பழக்கம் இருந்தது பெண் வீட்டார்கள் மூலம் தெரிந்தது. இதனால், கல்லூரி மாணவருடன் சேர்ந்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.