வெளிநாட்டவருக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக சிறுவர்களை விற்ற இருவர் கைது!!

640

Abuse

வெளிநாட்டவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக சிறுவர்களை பணத்திற்கு விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபையினர் கைதுசெய்துள்ளனர்.

பிரான்ஸ் பொலிஸார், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபைக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய பிரான்ஸ் பிரஜை ஒருவரை அந்த நாட்டு பொலிஸார் அண்மையில் கைதுசெய்திருந்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நபர் பல சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் அந்த நபர் இலங்கையை சேர்ந்த சில சிறுவர்களையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பணத்திற்காக பிரான்ஸ பிரஜையிடம் சிறுவர்களை வழங்கி வந்த தரகர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்ததுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.