பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை!!

778

இலங்கையில்..

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனொருவர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

பரத் மோகன் நிர்மலா தேவி தம்பதியின் மகனான சென்னையைச் சேர்ந்த ஹரேஷ் பரத் மோகன் தலைமன்னாரில் நேற்று முன் தினம் (06.10.2023) இரவு 11.37 மணியளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிமை பிற்பகல் 11.29 மணியளவில், சுமார் 11 மணி நேரம் 52 நிமிடம் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை அவர் வந்தடைந்துள்ளார்.

அரிச்சல்முனை வந்தடைந்த ஹரேஷ் பரத் மோகனை அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றதை பார்த்து அப்பகுதியிலிருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். ஹரேஷ் பரத் மோகன் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.