தங்கம்..
இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று திங்கட்கிழமை (09) கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன்,
அதன் புதிய விலை 155,400 அதிகரித்துள்ளது. அதேவேளை தங்கத்தின் விலை கடந்த புதன்கிழமை ரூபா 152,200 ஆக காணப்பட்டது. அந்தவகையில் கடந்த வாரம்,
புதன்கிழமை வரையில் 164,500, ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை தற்போது 168,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.