
இலங்கை கிரிக்கெட் அணியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவரும் உதவியாளராக கடமையாற்றியவருமான நிமால் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 15 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல்வேறு வகைகளில் உதவியாளராகவும் கிரிக்கெட் வீரர்களின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்துள்ளார்.
இவருடைய உயிரிழப்பானது இலங்கை கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பேரிழப்பாக கருதப்படுகின்றது.
கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டுத் துறைகளுடன் தொடர்பு வைத்திருந்த நிமால், அதற்கு தேவையான அனைத்து ஊக்குவிப்புக்களையும் வழங்கியதுடன் வீரர்கள் தமது கவனத்தை விளையாட்டியில் செலுத்துவதற்கு மிகவும் பாடுபட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் நிமாலின் ஒத்துழைப்பு இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





