ஆச்சரியத்தில் மிதக்கும் பின்னி!!

439

Binny

10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் என் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று ஸ்டூவர்ட் பின்னி கூறியுள்ளார்.

வெற்றி இலக்கான 106 ஓட்டங்களை எடுக்க முடியாமல் வங்கதேசம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. மோகித் சர்மா, பின்னி ஆகியோர் முறையே 4 மற்றும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் கிரீஸில் வைடாகச் சென்று பந்தை உட்புறமாக ஸ்விங் செய்ததில் நேற்று ஸ்டூவர்ட் பின்னிக்கு விக்கெட்டுகள் விழத்தொடங்கின. ஒரு சில பந்துகள் அதே கோணத்தில் உள்ளே வந்து பிறகு நேராகும் அல்லது வெளியே ஸ்விங் ஆகும்.

இதுகுறித்து பின்னி கூறுகையில், நேராக வீசி ஸ்விங் செய்வதே எனது பலம். அங்கு சூழ்நிலையும் ஸ்விங்கிற்குச் சாதகமாக இருந்தது. எனவே நான் சிறப்பாக வீசியதில் ஆச்சரியமில்லை, ஆனால் உலகின் முதல் 10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

மேலும், 105 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால் துவண்டு போய் விடவில்லை. ஆட்டத்தில் நாம் இல்லை என்ற உணர்வு வரவேயில்லை. இடைவேளையின் போது பேசினோம், நல்ல முறையில் பந்தை வீசி சுலபமான ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் போதும் என்று ஆலோசனை செய்தோம் என்று கூறியுள்ளார்.