வேற்றுக் கிரகவாசிகளை நெருங்கிவிட்டோம் : ஆய்வாளர்கள் தகவல்!!

580

Alianc

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒருவர் இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து விட கூடும் என்று கூறியுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. எனப்படும் வேற்று கிரகவாசிகளை கண்டறியும் அமைப்பை சேர்ந்த சேத் சொஸ்தக், பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

சொஸ்தக் இத்தகைய கணிப்பை தெரிவிப்பதற்கு ஏற்ப எஸ்.ஈ.டி.ஐ. அமைப்பில் புதிய ஆச்சரியமூட்டும் கருவிகள் உள்ளன. அவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் கெப்ளர் விண்வெளி ஆய்வு செயற்கை கோள் ஆகியவை ஆகும்.

நாசாவால் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு உள்ள கெப்ளர் இதுவரை 72 நட்சத்திர கூட்டங்களில் உள்ள 962 வேற்று கிரகங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

அவற்றில் கெப்ளர்-10சி ஒன்றாகும், இது பூமியை போன்று 17 மடங்கு எடை கொண்டது. கெப்ளர் தொலைநோக்கி 2,900 கண்டுபிடிப்புகளை கண்டறிய சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது கடந்த 2009ம் ஆண்டில் இருந்துதான் செயல்பட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, பூமியை போன்ற கிரகங்கள் ஏராளமாக உள்ளன என்பதை இது காட்டுகிறது.

கெப்ளர் கண்டுபிடிப்புகளால் பூமியை தவிர்த்து 40 பில்லியன் கிரகங்கள் பால்வழி மண்டலத்தில் இருக்ககூடும். எனவே, அவற்றில் வேற்று கிரகவாசிகள் வாழும் சூழலுக்கான வாய்ப்பும் உள்ளது.

பூமியின் வரலாற்றில் உயிர் என்றால் பக்டீரியா, அமீபா மற்றும் ஆல்கா ஆகியவற்றையும் குறிக்கும். இவை வேற்று கிரகங்களிலும் இருக்க கூடும். எனவே, இந்த அமைப்பானது, வேற்று கிரக வாசிகளின் வாழ்க்கை குறித்த தேடலுடன், அவர்களின் வாழ்க்கை முறையின் தேடலிலும் ஈடுபட்டு உள்ளது.

இதனால், அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள முடியும். பூமியை போன்ற கிரகங்களை குறித்த தேடலில் ரேடியோ அலைகள் குறித்தும் கவனத்தில் கொண்டுள்ளது.

இதுபோன்று எம்.ஈ.டி.ஐ. எனப்படும் வேற்று கிரகவாசிகளுடன் தகவல் பரிமாறி கொள்ளும் திட்டமும் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது கவனித்தலுடன், அதிக சத்தத்துடன் கத்துதல், நம்மை குறித்து அறிவித்தல், எங்கு உள்ளோம் என தெரிவித்தல் ஆகியவற்றையும் குறிக்கும்.

எனினும், இந்த வேற்று கிரகவாசிகள் நம்மை எப்படி பார்க்கும் என ஆய்வாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.