
நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்தியானந்தாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் சாமியார் நித்யானந்தாவுடன், படுக்கை அறையில் இருப்பது போன்ற காணொளி காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு, நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, கர்நாடக பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் நித்தியானந்தா ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், தனக்கும், நித்யானந்தாவுக்கும் இடையே குரு–பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாகவும் ரஞ்சிதா கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சாமியார் நித்யானந்தாவின் பிறந்தநாளில் அவரிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசியாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது நித்யானந்தா நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் திருப்பதிக்கு சென்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.





