
தமிழ் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் வீட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை அடையாறு, வெங்கடரத்தினா நகரில் உள்ள கங்கை அமரன் வீட்டில் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் ஒன்று வந்துள்ளது.
இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்களும், பொலிசாரும் கங்கை அமரன் வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது, அங்கு 2 சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, இந்த சிறுமிகளின் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களை வேலைக்கு வைத்துள்ளதாக வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுமிகளின் பெற்றோரிடம் விசாரணை செய்வதற்காக கங்கை அமரன் வீட்டுக்கு குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள், பொலிசார் மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





