புகைப்படத்தில் நிழலாடிய பேய் : அதிர்ச்சியில் உறைந்த தம்பதியர்!!

556

அமெரிக்காவில் பெண் ஒருவர் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தில் பேயின் உருவம் பதிவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் உள்ள அல்காட்ஸ் தீவில் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது.
கடந்த 1934ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை இயங்கி வந்த இந்த சிறைச்சாலை மிகவும் பிரபலமானது.

இங்கு ஷீலா சில்லெரி-பால் ரைஸ் என்ற தம்பதியர் சுற்றி பார்க்க வந்துள்ளனர்.அப்போது ஐபோன் வழியே சிறைச்சாலையில் உள்ள பார்வையாளர்கள் பகுதியில் ஷீலா புகைப்படம் எடுத்துள்ளார்.

இதன்பின் எடுத்த புகைப்படத்தை அவர் பார்க்கையில், அதில் ஒரு பெண்ணின் உருவம் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போயுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை எடுத்தபோது அங்கு யாரும் இல்லாததை பார்த்தவுடன் இத்தகவலை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

முதலில் இவ்விடயத்தை நம்பாத அவர் புகைப்படத்தை பார்த்தவுடன் அதில் ஒரு பெண் பேய், தனது தலைமுடி வரித்தப்படி மிகவும் கோரமாக இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இதனையடுத்து இந்த பேய் குறித்த விவரங்களை அறிய, அங்குள்ள முன்னாள் ஊழியர்களிடம் இத்தம்பதியர் விசாரித்துள்ளனர். எனினும் அதுபற்றி யாருக்கும் தெரியவில்லை.

மேலும் இந்த பெண் எதற்காக எனது புகைப்படத்தில் வந்து உள்ளார் என்பது குறித்து அறிவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக ஷீலா தெரிவித்துள்ளார்.

D1 D2