அரசியல் பிரவேசம் பற்றி மனம் திறந்த விஜய்!!

567

Vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், தமிழ் திரைத் துறையில் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், பல திரைபடங்களில் அரசியல் தொடர்பான வசனங்கள் மூலம் பல பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

அதோடு சில ஆண்டுகளுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றியதோடு, அதற்கென தனிக் கொடியையும், வாசகத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே கடந்த சட்டசபை தேர்தலின்போது திமுகவை எதிர்க்கும் விதமாக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இப்படியாக தனக்குள் இருக்கும் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்திக்கொண்டே வரும் விஜய், அவ்வப்போது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் எப்போது உங்களது அரசியல் பிரவேசம் என்ற அவரது ரசிகர்களின் கேள்விக்கு, பதிலளிக்கையில், இப்போது என்னால் முடிந்தவரை ஏழை மக்களுக்கு படிப்பு, திருமண உதவி, நலத்திட்டங்கள் என்று செய்கிறேன்.

ஆனால் எதிர்காலத்தில் பெரிய அளவில் சந்தர்ப்பங்கள் அமைகிறபட்சத்தில் இன்னும் அதிக அளவில் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று மறைமுகமாக பதிலளித்துள்ளார்.