வவுனியா கோவில்குளத்தை அண்டிய பகுதிகளில் அடிக்கடி நள்ளிரவில் காணாமல் போகும் மின்சாரம் : பொதுமக்கள் விசனம்!!

552

Power cut

வவுனியா கோவில்குளத்தை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு வேளைகளில் மின்சாரம் தடைப்படுகின்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

அதன் தொடர்ச்சியாகநேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை ஐந்து மணி வரை குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு குறைந்த மின்னளுத்தத்தம் கொண்ட மின்சாரமே கிடைக்கப் பெற்றது.

கடும் வெப்பம் நிலவும் இக்காலகட்டத்தில் பொதுமக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச வாசிகள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

-பண்டிதர்-