தமிழ்நாடு – நாமக்கல் விபத்தில் இலங்கை அகதிகள் இருவர் பலி!!

1272

Accident

தமிழ்நாடு, நாமல்கல் மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியிலிருந்து திருச்சி செல்லும் சாலையிலுள்ளது எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாம்.

இந்த முகாமைச் சேர்ந்த ஆனந்தன் மகன் நிஷாந்த் (23), கனகரத்தினம் என்பவரின் மகன் கனகராஜ் (25), குணசீலன் மகன் சுலக்சன் (24) இவர்கள் மூவரும் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள வாழவந்தி என்று இடத்திலுள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணியாற்றி வந்தனர்.

இரவு வேலை முடித்துவிட்டு மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திருச்சி சாலையில் இருந்து வடவத்தூர் செல்லும் சாலை அருகே வந்த போது, எதிரே மற்றொரு இலங்கை அகதியான அந்தோணி மகன் கண்ணன் (42) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.

இரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட இந்த விபத்தில், நிஷாந்த் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கண்ணன், கனகராஜ், சுலக்சன் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணனும் உயிரிழந்தார். கனகராஜ், சுலக்சன் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.