
மூளை வளர்ச்சி குறைந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் சம்பந்தமாக, உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இராணுவ பொலிஸாருக்கே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். விசாரணைகளில் இராணுவ வீரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
மூளை வளர்ச்சி குன்றிய 15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் வீரர் ஒருவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.





