வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டிக் கலைத்த பொலிசார்!!(படங்கள்)

490

வவுனியாவில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நேற்று (20.06) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தலையிட்டு விரட்டி விரட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தினர்.

வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு எதிராக சமூக நிதிக்கான வெகுஜன அமைப்பை சேர்ந்த சில தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமயமே இச் சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையில் மதிய நேர தொழுகையை முடித்து வெளியில் வந்த ஒரு சில முஸ்லீம் மக்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கோசமெழுப்பியிருந்த சமயம் அவ் விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது கோரிக்கைக்கு செவி சாய்காக்காது அளுத்கம சம்பவத்திற்கு நீதியான விசாரணை நடத்து, முஸ்லீம் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடு, முஸ்லீம்களை தாக்காதே என் கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.

அந்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா தலைமை பொலிஸ் நிலையதத்தின் பொறுப்பதிகாரி சன் அபயரத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது எனவும் அவர்கள் வைத்திருந்த பதாதையையும் பறிமுதல் செய்திருந்தார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பி பொலிஸாருடன் முரண்பட்டுக்கொள்ள ஒரு சிலரை பொலிஸார் இழுத்துச் சென்ற போதிலும் அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களை விடுவித்து சென்றிருந்ததுடன் அங்கிருந்தவர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.

இதேவேளை அவ் அமைப்பின் பிரதிநிதிகளான சிலரை பள்ளிவாசல் பிரதேசத்தல் இருந்து சில மீற்றர் தூரம் வரை பொலிஸார் விரட்டியிருந்தனர்.

இச்சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் பள்ளிவாசலில் இருந்து வருகை தந்திருந்த அதிகமான முஸ்லீம் மக்கள் சம்பவத்தை வேடிக்கை பார்த்திருந்ததுடன் தமது வர்த்தக நிலையங்களையும் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை வவுனியா நகர் முழுவதும் காலையில் இருந்து பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் நகர்ப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

1 2 3 4 5 6