பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (21.06) அதிகாலை இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறை வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள இந்த வர்த்தக நிலையம் முற்று முழுதாக எரிந்து சாம்பராகியுள்ளது.
ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் தற்போதும் தீயணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார கோளாறு காரணமாக இந்த தீ ஏற்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸச ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.






