இஸ்ரேலில் தாக்குதலில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது!!

774

இஸ்ரேலில்..

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான களனி பகுதியைச் சேர்ந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரது சடலம் இஸ்ரேலின் பெட்டா திக்வாவில் அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். அனுலா ஜயதிலக்க கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் காணாமல் போயிருந்ததார்.

பின்னர் அவர் , அக்டோபர் 17 ஆம் திகதி உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகளினால் இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.