விமான சக்கரத்தில் 5 1/2 மணிநேரம் பயணம் செய்த சிறுவன்!! (வீடியோ)

614

Boy

அமெரிக்காவை சேர்ந்த 15 வயது சிறுவன் தன் தாயை காண வேண்டும் என்பதற்காக விமான சக்கரத்தில் சுமார் 5 1/2 மணிநேரம் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தில் வசித்து வந்த யாஹயா அப்டி(Yahya Abdi) என்ற 15 வயது சிறுவன் தனது தந்தையும், சித்தியும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதால் அவர்களிடமிருந்து தப்பித்து ஹவாயில் அகதியை உள்ள தன் தாயை பார்க்க முடிவு செய்திருந்தான்.

ஆனால் இவனிடம் பயணச்சீட்டு வாங்க பணம் இல்லாததால், நண்பர்களின் அறிவுரையின் படி, கலிபோனியாவில் உள்ள விமான நிலையத்தில் நுழைந்து, விமானத்தின் சக்கரம் உள்ளே இழுக்கப்படும் பகுதியில் ஒழிந்து கொண்டுள்ளான்.

எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சக்கரம் இருக்கும் பகுதியில் சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தொடர்ந்து 5 1/2 மணிநேரம் பயணம் செய்த இந்த சிறுவன், சிறு காயமும்மின்றி தரையிரங்கியது ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கலிபோனியாவின் அதிகாரிகள் தற்செயலாக கண்காணிப்பு கமெராவில் இந்த சிறுவன் சக்கரம் இருக்கும் பகுதியில் நுழைவதை பார்த்து உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து ஹவாய் தீவில் விமானம் இறங்கியவுடன் மீட்புக்குழுவினர் இந்த சிறுவனை பத்திரமாக மீட்டதுடன், தற்போது இவனது தாயுடன் இவனை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.