நெஸ் வாடியாவை மிரட்டிய நிழல் உலக தாதா யார் : திடுக்கிடும் தகவல்!!

520

Preethi

நடிகை பிரீத்தி ஜிந்தா விவகாரத்தில், நெஸ் வாடியாவுக்கு மிரட்டல் விடுத்த நிழல் உலக தாதா பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரீத்தி ஜிந்தா, தனது முன்னாள் காதலரான நெஸ் வாடியா மீது பாலியல் தொந்தரவு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மெரீன் டிரைவ் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் புகார் கொடுத்த பிரீத்தி ஜிந்தாவிடம் கூடுதல் விவரங்களை சேகரிக்க பொலிசார் முடிவு செய்தனர். அதன் பிறகே நெஸ் வாடியாவிடம் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையே நெஸ் வாடியாவின் தந்தை நுஸ்லி வாடியாவின் செயலாளர்கள் 2 பேருக்கு கடந்த திங்கட்கிழமை தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.

இந்த தகவலை நெஸ் வாடியாவிடம் தெரிவிக்கும் படியும், பிரீத்தி ஜிந்தாவுக்கு தொல்லை கொடுத்தால் தொழிலை முடக்குவோம் என்றும் மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிரட்டல் விடுத்தவர் தன்னை நிழல் உலக தாதா ரவி பூஜாரி என்று கூறிக் கொண்டுள்ளார்.இது குறித்து மும்பை குற்றப்பிரிவு பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், நுஸ்லி வாடியாவின் செயலாளர்கள் 2 பேரிடமும், எங்களிடம் உள்ள ரவி பூஜாரியின் குரல் மாதிரியை போட்டு காண்பித்தோம்.

இது தங்களுக்கு மிரட்டல் விடுத்த குரலுடன் ஒத்து போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மிரட்டல் விடுத்தது ரவி பூஜாரியாக தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.

மேலும், நுஸ்லி வாடியாவின் செயலாளர்களின் தொலைப்பேசி எண், ரவி பூஜாரிக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.