இஸ்ரேல் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண் : நாட்டுக்கு கொண்டு வரப்படும் உடல்!!

1012

இஸ்ரேல்..

இஸ்ரேல் – மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான யுத்தத்தின் போது உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் உடல் நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளையதினம் காலை குறித்த பெண்ணின் உடல் இலங்கையை வந்தடையும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மோதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கையர் இறந்துவிட்டாரா என்பதை கண்டறியும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அவரது குழந்தைகளின் டிஎன்ஏ மாதிரிகளைப் பயன்படுத்தி அந்த உறுதிப்படுத்தல்கள் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.