வவுனியாவில் 15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய 45 வயது தந்தை கைது!!

524

Abuse

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட கன்னாட்டி கணேசபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமியுடன் ஒரு வருடகாலமாக குடும்பம் நடத்திய வந்த 45 வயது தந்தையை பொலிசார் கைதுசெய்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிவருவதாவது..

கன்னாட்டி கணேசபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளையின் தாய் கடந்த வருடம் குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந் நிலையில் தனது 14 வயது மகளை தனது 45 வயதான இரண்டாவது கணவனின் பொறுப்பில் பாதுகாப்புக்காக ஒப்படைத்து சென்றுள்ள நிலையில் சிறுமியுடன் ஒரு வருடகாலமாக குடுமபம் நடத்தி வந்துள்ளார். இதை அறிந்த பொலிசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி தன் விருப்பத்தின்படியே இவ்வாறு நடைபெற்றதாகவும் தான் அவரையே திருமணம் செய்யப் போவதாகவும் கூறுகின்றார்.