வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடாத்தும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள், இன்றையதினம் (22.06) காலை 10.00 மணிக்கு கழக மைதானத்தில் ஆரம்பமானது.
இவ் போட்டியினை கழகத்தின் போசகர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது களத்தில் செவ்வானம் மற்றும் யங் பையிற் அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கழகத்தின் தலைவர் திரு இ.பிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழகத்தின் போசகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன் கழகத்தின் செயலாளர் திரு சௌ.விமல்ராஜ், பொருளாளர் திரு ச.இளந்திரையன் ஆகியோருடன் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களான திரு. அருளேந்திரன், திரு. ஜீவகுமார், திரு. சங்கர், திரு.மணி ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






