திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த இளைஞன் பரிதாபமாக மரணம்!!

1090

மொனராகலையில்..

மொனராகலை பொத்துவில் வீதியில் கிவுலேயாய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தம, கிராவணபெரலிய பகுதியைச் சேர்ந்த கே.எம். ரசிக லக்மால் தர்மப்பிரிய என்ற 29 வயதுடைய சூரியவெவ பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.

மொனராகலையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக தனது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருடன் மொனராகலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, ​​அம்பாறை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கார் மீது மோதியுள்ளது.

காரை ஓட்டி வந்த கான்ஸ்டபிள், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இருவர் காயமடைந்து சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சியம்பலாண்டுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ரவீந்திர ஹேரத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.