மனைவி கொடூரமாக கொலை.. 6 மாதமாக நாடகமாடி ஊரை ஏமாற்றிய கணவன்!!

406


திருவண்ணாமலையில்..திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பெண் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.ஒரு பெண் பிணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா? என்று போலீசார் விசாரித்தனர்.


ஆனால் பெண் யார் என்ற விவரம் போலீசாருக்கு ஆரம்பம் முதலே தெரியவில்லை.. பெண்ணின் உடலை கேட்டு யாருமே வராத நிலையில், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் என வட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அந்த பெண் யார் என்று வந்தவாசி போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த 39 வயதாகும் ஜெயராமன் (வயது 39) என்பவர், சீர்காழி காவல் நிலையத்தில் தனது மனைவி நித்தியாவை (34) ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முதல் காணவில்லை என்று செப்டம்பர் மாதம் 13-ந் தேதி புகார் கொடுத்தார்..


அதன்பேரில் போலீசார் நித்தியாவின் புகைப்படத்தை வைத்து விசாரித்தனர்.. மேலும் அந்த புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தார்கள்.

இந்த நிலையில் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு நித்தியாவின் புகைப்படம் மெயிலில் வந்தது. அந்த புகைப்படமும் வெண்குன்றம் தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நித்தியாவின் சொந்த ஊர் வந்தவாசி என்றும், அவரது தாய் சாந்தி என்பதும் தெரிய வந்தது. ஏப்ரல் மாதமே இறந்த நித்யாவை ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை என்று கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்தார்கள்.

அதைத்தொடர்ந்து போலீஸார் நித்தியாவின் தாய் சாந்தி தொலைபேசியை ஜெயராமனுடன் பேச வைத்தனர். அப்போது அவர் வந்தவாசிக்கு வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஜெயராமன் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் பஸ்சில் இறங்கும்போது போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார் சந்தேகப்பட்டது போல் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலமானது. நித்யாவுக்கும் சீர்காழியில் வசித்து வந்த ஜெயராமனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.

ஜெயராமன் சீர்காழியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நித்யாவுக்கும் ஜெயராமனுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நித்தியா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவாராம்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி நித்தியா வீட்டை விட்டு வெளியே சென்றவர், அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 17-ந் தேதி ஜெயராமனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வந்தவாசியில் இருக்கிறேன். என்னை வந்து அழைத்து செல்லுமாறு நித்யா கூறினாராம்.

இதையடுத்து ஜெயராமன் வந்தவாசிக்கு வந்ததும், நித்தியா அவரை அழைத்துக் கொண்டு தவளகிரி மலை கோவிலுக்கு போயிருக்கிறார். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயராமன் நித்யாவை 1000 அடி உச்சயில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளளார்.

பின்னர் மனைவியை காணவில்லை என்று சீர்காழி போலீசில் மூன்று மாதம் கழித்து புகார் அளித்துள்ளார் . காணவிலை புகார் கொடுத்த மாதம், சொன்ன விஷயமே எல்லாமே பொய்யாக இருந்தததால் சிக்கி உள்ளார் ஜெயராமன். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.