பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூர தாய் : 5 நாட்களாக நாடகமாடியவர் சிக்கிய பரிதாபம்!!

656

தேனியில்..

பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடியது தேனி பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. ஒரு சில மாதங்களிலேயே கர்ப்பமான அவர் பிரசவத்திற்காக தாய் வீடு உள்ள கம்பம் கிராமச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் கடந்த மாதம் சினேகாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து வீடு திரும்பியவர் சினேகா தனது தாய், தந்தை மற்றும் பாட்டியோடு வசித்து வந்துள்ளார்.

தாய், தந்தை இருவரும் கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் பாட்டி சரசு என்பவர் துணைக்கு உடன் இருந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி காலையில் குளிக்க சென்றதாகவும் திரும்பி வந்த பார்த்த போது குழந்தையை யாரோ தூக்கு சென்றுவிட்டதாக சினேகா அலறி துடித்துள்ளார்.

இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சினேகாவின் வீட்டிற்கு சென்று விசாரித்த போது குழந்தையின் மீது இரண்டு துணிகள் போர்த்தப்பட்டிருந்ததாகவும், தற்போது ஒரு துணி மட்டுமே உள்ளது என்றும் மற்றொரு துணி வெளியே கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது அவ்வழியாக மர்ம நபர்கள் ஒரு சிலர் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு அதிகரித்தது. குழந்தையை யாரேனும் கடத்தி சென்று விட்டார்களோ என சந்தேகம் எழுந்ததையடுத்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் குடுகுடுப்பைக்காரர்கள் போல் சுற்றித்திரிந்த அனைவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். வழக்கில் எந்த வித முன்னேற்றமு் இல்லாத காரணத்தால் சினேகாவின் வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சோதனை செய்தபோது வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நீர் நிறைந்திருந்த பால் கேனிற்குள் குழந்தை சடலமாக கிடந்துள்ளது.

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குழந்தையை பால் கேனிற்குள் போட்டது யார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். சினேகாவின் பாட்டி சரசு மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை தொடர்ந்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில் கடந்த 5 நாட்கள் நடந்த விசாரணைக்கு பின்னர் நேற்று குழந்தையை பால் கேனிற்குள் போட்டு கொலை செய்தது குழந்தையின் தாயான சினேகா தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

பாட்டியை கடைக்கு அனுப்பி வைத்து விட்டு குழந்தையை பால் கேனிற்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் குளிக்கச் சென்று நாடகமாடியது தெரிய வந்தது.

குழந்தையை கொலை செய்தது சினேகாவின் பாட்டி தான் என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை செய்து வந்த போது,சினேகா எதுவும் தெரியாத அப்பாவி போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனையடுத்து நேற்று இரவு சினேகாவை போலீசார் கைது செய்த நிலையில் அவர் எதற்காக குழந்தையை கொலை செய்தார்?என்ற கோணத்தில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.