உயிரைப் பறித்த முறைகேடான உறவு : கொலை செய்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

1263


மாவனல்லையில்..தனது சொந்த கணவரை திட்டமிட்டு கொலைசெய்த பெண்ணொருவரை மாவனல்லை பொலிஸார் தீவிர விசாரணைகளின் பின்னர் கைதுசெய்த்துள்ளனர். குறித்த பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி கணவனை கொன்ற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்த நபரின் மனைவி, அவரது முறைகேடான கணவன் மற்றும் மற்றுமொரு நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் நேற்று (30.10.2023) உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி மாவனல்லை, கலதர பிரதேசத்தில் வீதிக்கு அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.


இதனடிப்படையில், மரணம் தொடர்பில் கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய வளாகத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அங்கு அறிக்கை வழங்கப்பட்டது. அதன்படி, உயிரிழந்தவரின் மனைவி சடலத்தை பெற்று இறுதிக் கிரியைகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், மூன்று மாதங்களாக மாவனல்லை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், உயிரிழந்தவரின் மனைவியின் தொலைபேசி பதிவுகளை ஆராய்ந்து இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இறந்தவரின் மனைவி தனது முறைகேடான கணவருடன் சேர்ந்து கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி அவரை கொலை செய்ய முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் 43 வயதான கெமுனு குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.


பின்னர், மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கொலையுடன் தொடர்புடைய மனைவியான 41 வயதுடைய பெண் மற்றும் அவரது முறைகேடான கணவர், ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி ஆகியோர், கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.