சமைக்க மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்… அழுகிய உடலுடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் வசித்த கொடூரம்!!

686


விருத்தாசலத்தில்..விருத்தாசலத்தில் மனைவி சமைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் தலையணையால் அமுக்கி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முல்லை நகரை சேர்ந்தவர்கள் மூர்த்தி – அனுசியா தம்பதி. இவர்களது மூத்த மகள் புதுச்சேரியிலும், இளைய மகள் கோயம்புத்தூரிலும் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர.
வெளிநாட்டில் ஹோட்டல் நடத்தி வந்த மூர்த்தி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். மூர்த்திக்கும் அவரது மனைவி அனுசியாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுது வழக்கம். அனுசியாவுக்கு அவ்வப்போது மனநலம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு அவர் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


வெளியூரில் படிக்கும் இரு பெண் பிள்ளைகளும் ஆயுதபூஜை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் மூர்த்தியின் வீட்டின் வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசியுள்ளது.

புதுச்சேரியில் படிக்கும் மூத்த மகள் பவித்ரா வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளார் அப்பொழுது வீட்டின் உள்ளே கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது அவரது தாய் அனுசியா அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.


இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் கூச்சலிட்டு அழுததும், அருகே இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அனுசியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுசியாவின் கணவர் மூர்த்தியை விருத்தாசலம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் தேதி சமைக்க மறுத்ததால் அனுசியாவுக்கும், மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சமையல் செய்யாமல் படுக்கையறை கட்டிலில் அனுசியா படுத்து இருந்ததால் மூர்த்தி மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். அப்போது தலையணையை எடுத்து மனைவி அனுசியாவின் முகத்தில் அமுக்கி அவரை கொலை செய்ததாக மூர்த்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மனைவியை கொலை செய்து விட்டு அவரது உடலுடன் ஒரே வீட்டில் 4 நாட்கள் வசித்து இருக்கிறார் மூர்த்தி. போலீசார் சென்றபோதும் எந்த சலனமும் இல்லாமல் அவரது வேலைகளை செய்து கொண்டு இருந்துள்ளார் மூர்த்தி.

மூர்த்தியை கைது செய்த விருத்தாசலம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மனைவியை கொலை செய்து அவரது உடல் அழுகும் வரை ஒரே வீட்டிலேயே கணவன் வசித்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.