மகளின் படுக்கை அறையில் ஆசிரியர் : அதிர்ச்சியடைந்த தாய்!!

569

Teacher

இங்கிலாந்தில் பாடம் படிக்க வந்த மாணவியுடன் உடலுறவு வைத்துக் கொண்ட ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள 16 வயது பள்ளி மாணவி ஒருவர் மேல்நிலை கல்வி பொது சான்றிதழ் தேர்வுக்காக படித்து வந்துள்ளார், அவருக்கு திருமணமான ஆசிரியர் அண்ட்ரூ வால்ஸ் (35) பாடம் எடுத்து வந்தார்.

ஒருநாள் தற்செயலாக மாணவியின் தாயார் வெளியே சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது மகளின் தலை கலைந்திருந்தது, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் மகளின் படுக்கை அறையை சென்று பரிசோதித்து பார்த்துள்ளார்.

அறையின் ஓரத்தில் ஷூ இருந்ததுடன், ஆசிரியர் அண்ட்ரூ மறைந்திருந்தது தெரியவந்தது. மேலும் தனது மகளுடன் ஆசிரியர் பாலியல் உறவு கொண்டது அம்பலமானது.

இதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, பொலிசார் ஆசிரியரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு போல்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியருக்கு 14 மாதம் சிறைத்தண்டனை வழங்கினார்.

வேலையில் இருந்து 2 வருடங்களுக்கு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டும் உள்ளார். மேலும் 200 மணி நேரம் அவர் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.