கொழும்பில்..
கொழும்பில் கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு – மருதானையில் நேற்று(31.09.2023) பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.சிறுமியின் சடலம் கொழும்பு பொரளை சிறுவர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.